உலகில் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலம் தமிழ் கல்வி: மதன்கார்க்கியின் புதிய முயற்சி
- IndiaGlitz, [Friday,July 17 2020]
எளிமையான முறையில் தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகளுக்காக பாடலாசிரியர் மதன்கார்க்கி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
’பயில்’ என்ற இந்த ஆராய்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையம் மூலம் தமிழ் கற்க விரும்பினால் அவர்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை வடிவமைத்து இந்த நிறுவனம் தரும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் பயில ஏற்கனவே மாணவர்கள் இணைந்துள்ளனர் என்றும் இதில் தமிழ் பயில வயது வரம்பு இல்லை என்றும், அனைத்து வயதினரும் பயிலலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே வகுப்பில் சிறுவர் சிறுமியரும் வயது முதிர்ந்த முதியவர்களும் ஒன்றாக தமிழ் படிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் கனவை இந்நிறுவனம் நிறைவேற்றி தருகிறது என்பதும் இந்நிறுவனத்தில் சேருபவர்கள் 30 நாட்களில் தமிழை பயின்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை கற்று கொள்வது மட்டுமின்றி பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்றவைகளும் பயிற்றுவிக்கப்படுகிறது என்பதும், ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் தமிழ் கற்பிக்கப்படுவதால், குழந்தைகளும் பெரியோர்களும் ஆர்வத்தோடு தமிழ் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது.