தீபாவளி மற்றும் பொங்கலை குறி வைக்கும் சிம்புவின் 'ஈஸ்வரன்'

  • IndiaGlitz, [Friday,November 06 2020]

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘ஈஸ்வரன்’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் சிம்பு இணைந்தார் என்பதும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிம்பு சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘ஈஸ்வரன்’படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சிம்புவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நாற்பதே நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாகும்

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’படத்தின் டீசரை தீபாவளி அன்றும், படத்தை பொங்கல் தினத்திலும் ரிலீஸ் செய்ய ‘ஈஸ்வரன்’படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய இரண்டு பண்டிகை நாட்களிலும் சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரஜினி பயோபிக்கில் தனுஷ்: பிரபல இயக்குனர் விருப்பம்!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்டா? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு அதிகமாக இருந்தாலும் காமெடி மற்றும்

அமெரிக்காவையே பார்த்து- இந்தியாவிடம் போய் பாடம் படிங்க… வைரலாகும் டிவிட்!!!

கடந்த 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த நாட்டு தேர்தல் விதிமுறைப்படி பெரும்பாலான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே தபால் ஓட்டுகளை செலுத்தி விட்டனர்.

பிக்பாஸ் சனம்ஷெட்டி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சனம்ஷெட்டியின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை

மலை உச்சியில் இருந்து இளம்பெண் எடுத்த செல்பி… அதற்குப்பின் நடந்த சோகச் சம்பவம்!

செல்பி மோகம் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டுபோய் விட்டு விடுகிறது. மத்தியப்பிரதேசத்தின் மலைப்பாங்கான சுற்றுலா பகுதியில் இருந்து