தீபாவளி மற்றும் பொங்கலை குறி வைக்கும் சிம்புவின் 'ஈஸ்வரன்'
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘ஈஸ்வரன்’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் சிம்பு இணைந்தார் என்பதும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிம்பு சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘ஈஸ்வரன்’படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சிம்புவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நாற்பதே நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாகும்
இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’படத்தின் டீசரை தீபாவளி அன்றும், படத்தை பொங்கல் தினத்திலும் ரிலீஸ் செய்ய ‘ஈஸ்வரன்’படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய இரண்டு பண்டிகை நாட்களிலும் சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
#ShootCompleted ??#EeswaranTeaserForDiwali
— Silambarasan TR (@SilambarasanTR_) November 6, 2020
I heart fully thank each and everyone of my team #Eeswaran for this beautiful journey! & Special thanks to all my fans for all the love and support #SilambarasanTR #Atman #STR pic.twitter.com/7lAXOnjZyP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments