close
Choose your channels

நிதி அகர்வாலின் ஃபர்ஸ்ட்லுக்: வைரலாகும் 'ஈஸ்வரன்' போஸ்டர்கள்!

Wednesday, November 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’ஈஸ்வரன்’ படத்தின் சிம்புவின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் வரும் தீபாவளி அன்று டீசரும் வெளியாகவிருப்பதால் சிம்பு ரசிகர்கள் டீசருக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது ’ஈஸ்வரன்’ படத்தின் மேலும் ஒருசில புதிய ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்று நாயகி நிதி அகர்வால் சிம்புவுடன் இருக்கும் போஸ்டரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக இந்த படத்தின் நாயகியின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. கைலி, சட்டை, துண்டு கெட்டப்பில் சிம்பு, சேலை காஸ்ட்யூமில் நிதி அகர்வால் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

மேலும் பாரதிராஜா மற்றும் குடும்பத்துடன் சிம்பு இருக்கும் ஸ்டில், சிம்புவும் சுசீந்திரனும் இருக்கும் ஒரு ஸ்டில் என இன்று வெளியாகியிருக்கும் ஸ்டில்கள் அனைத்துமே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment