இந்தியாவில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் அச்சம்
- IndiaGlitz, [Friday,June 02 2017]
இந்திய தலைநகர் டெல்லி அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இன்று அதிகாலை 4.25 மணிக்கு தலைநகர் டெல்லியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், பொதுமக்கள் பீதியடைந்து சாலைகளை நோக்கி ஓடி வந்ததாகவும் வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 1 நிமிடம் வரை நீடித்தது. இதனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நில அதிர்வியல் துறை விஞ்ஞானி வேட்பிரகாஷ் தாகூர் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'நிலந்டுக்கம் இன்று அதிகாலை 4.25 மணியளவில் உணரப்பட்டது. பூகம்பத்தின் அளவு 5 மடங்காக உள்ளதூ. இது ஒரு மிதமான நிலநடுக்கம் தான்' என்று கூறியுள்ளார்.