குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்?

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

குஜராத் மாநிலம் தெற்கு ராஜ்கோட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்கோட்டில் இருந்து 182 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.37 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அசாமில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் தற்போது டவ்-தே புயல், கருப்பு பூஞ்சை தொற்று தற்போது நிலநடுக்கம் எனத் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஒருவித பதற்றத்துடன் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

More News

முன்னாள் எம்.பி காலமானார்...! அரசியில் கட்சியினர் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.பி இன்று வயது மூப்பினால் காலமானார்.

பயன்பாட்டுக்கு வந்த 2DG கொரோனா சிகிச்சை தூள் மருந்து? எங்கு கிடைக்கும்?

கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் தூள் வடிவிலான 2DG எனப்படும் ஒரு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! குவியும் பாராட்டுக்கள்!

தமிழக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி

ரெம்டெசிவிர் வாங்க நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம்: காவல்துறை அறிவிப்பு

கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நேரு ஸ்டேடியத்தில்

ஒரே மணமேடையில் அக்கா-தங்கைக்கு தாலி கட்டிய வாலிபர்! மணமகள்கள் வீட்டார் மகிழ்ச்சி!

வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் அக்கா தங்கை ஆகிய இருவருக்கும் தாலிகட்டி மனைவிகளாக ஏற்றுக்கொண்டதை அடுத்து அந்த மணமகள்களின் வீட்டார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.