குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்?
- IndiaGlitz, [Monday,May 17 2021]
குஜராத் மாநிலம் தெற்கு ராஜ்கோட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்கோட்டில் இருந்து 182 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.37 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அசாமில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் தற்போது டவ்-தே புயல், கருப்பு பூஞ்சை தொற்று தற்போது நிலநடுக்கம் எனத் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஒருவித பதற்றத்துடன் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.