நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளான கூடன்குளம், கூட்டப்புளி, ராதாபுரம், பணகுடி போன்ற பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நில அதிர்வு வெறும் 30 வினாடிகள் வரைமட்டுமே நீடித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

திருநெல்வேலி தவிர கன்னியாக்குமரி மாவட்டத்தின் அஞ்சுகிராமம், நாகர்கோவில் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகப் பொதுமக்கள் கூறியுள்ளனர். நேற்று அசாமில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கூடவே சேதத்தையும் ஏற்படுத்தியது. அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்டு வடகிழக்கு மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் கடும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த செய்தியை அடுத்து தற்போது தமிழகத்தின் நெல்லை, கன்னியாக்குமரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வரலாற்று ஆசிரியர்களே முகம் சுளிக்கும் அரசன் காலிகுலா கதை… ஆடியோ வடிவில்!

ஜுலியஸ் சீசரின் அடையாளமாகப் பெயர்ப்பெற்ற ரோம மன்னன் ஒருவரை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் காலிகுலா என்றே அழைக்கின்றனர்.

வீட்டில் இருந்தபடியே கொரோனா இருப்பதைக் கண்டுபிடிக்க முடியுமா? விளக்கும் வீடியோ!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது இந்தியா முழுக்கவே பீதியை ஏற்படுத்தி வருகிறது

தீவிரவாத செயலை தூண்டுகிறார்: நடிகர் சித்தார்த்தை கைது செய்ய புகார்!

சமீபத்தில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தங்களுடைய மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது வதந்தியை கிளப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மே 1,2-இல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா...? 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்து தலைமை  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டருக்காக போலீசார் காலில் விழுந்து கதறும் நபரின் வீடியோ… உ.பி.யிலா இப்படி?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லவே இல்லை.