தொடரும் முதல் காட்சி ரத்து படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் தற்போது அது வியாழக்கிழமையாக மாறிவிட்டது. அதேபோல் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னர் அதிகாலை காட்சிகள் திரையிடப்படும். ஆனால் தற்போது கிட்டதட்ட அனைத்து படங்களும் ஐந்து மணி காட்சிகள் திரையிடப்படுகிறது.
ஐந்து மணி காட்சி திரையிடும் ஆர்வத்தை குறை சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் சமீபகாலமாக ஐந்து மணி காட்சிகள் கே.டி.எம் காரணமாக ரத்து செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ஐந்து மணி காட்சியை ஆர்வத்துடன் பார்க்க நான்கு மணிக்கே ரசிகர்கள் அரைகுறை தூக்கத்தில் இருந்து எழுந்து திரையரங்குகளுக்கு வந்த பின்னர் திடீரென கே.டி.எம். பிரச்சனையால் காட்சி ரத்து என்பது ரசிகர்களை அலைக்கழிப்பது மட்டுமின்றி மனரீதியாக அந்த படத்தின் மீது ஒருவித கோபத்தை ஏற்படுகிறது. இந்த கோபம் அந்த படத்தை விமர்சிப்பதில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நல்ல படங்களுக்கும் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்து படத்தின் ரிசல்ட்டே மாறிவிடும் அபாயமும் உள்ளது.
எனவே கே.டி.எம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் முடிந்த பின்னர் ஐந்து மணிக்காட்சி அறிவிப்பை வெளியிடுவது நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இன்று வெளியாகும் விஜய்சேதுபாதி-த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் அதிகாலை காட்சி ரத்து என்ற செய்தி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments