கழுகு பின்னணியில் 'கங்குவா' போஸ்டர்.. சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் அந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
கழுகின் பின்னணியில் உள்ள இந்த மாஸ் போஸ்டர் சூர்யா ரசிகர்களுக்கு சரியான பொங்கல் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா கிட்டத்தட்ட பத்து விதமான கெட்டப்புகளில் நடித்திருப்பார் என்று கூறப்படும் நிலையில் அதில் இரண்டு கெட்டப்புகள் இந்த போஸ்டரில் உள்ளன என்பதும் இரண்டுமே வெறித்தனமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்
ஏற்கனவே கழுகு, காக்கா என சர்ச்சைக்குரிய பதிவுகள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அதே கழுகை பின்னணியாக கொண்டு இந்த போஸ்டர் உருவாக்கி உள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர். மேலும் இந்த பதிவில் சூர்யா, ஐந்து மொழிகளில் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.
அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
— Suriya Sivakumar (@Suriya_offl) January 16, 2024
Happy Pongal!
मकर संक्रांति शुभकामनाएँ!
ಎಲ್ಲರಿಗೂ ಸಂಕ್ರಾಂತಿ!ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು!
అందరికి సంక్రాంతి!శుభాకాంక్షలు! #Kanguva #Kanguva2ndLook pic.twitter.com/Xe1yQ89nf4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com