வாடகை ஆட்டோ, கார்களில் பயணிக்க இ-பதிவு... பெறுவது எப்படி?
- IndiaGlitz, [Monday,June 07 2021]
தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை குறைந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டள்ளது. இந்நேரத்தில் அரசு, தனியார் பேருந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், தேநீர் கடை, மத வழிபாட்டு தலங்கள், சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகள், தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, கூரியர் போன்ற தபால் சேவைக்கு அனுமதி, உணவு மற்றும் பொருள்களை விநியோகிக்க ஆன்லைகள் நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.
இந்த ஊரடங்கின்போது வாடகை ஆட்டோக்கள், கார்கள் மூலம் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பயணத்திற்கு இ-பதிவு அவசியம். எனவே இ-பதிவு இணையதளத்தில் வாடகை ஆட்டோக்கள், கார்கள் மூலம் பயணிக்க அனுமதி பெற வேண்டும். இதற்கு https://eregister.tnega.org எனும் இணையத்தளத்தில் சென்று முறையான ஆவணங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறித்தி உள்ளது.
மேலும் இதில் தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற இணைப்பிற்கு சென்று பயணத்தின் முறையை குறிப்பிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். பயணம் செய்வதற்கான காரணத்தையும் இதில் விளக்க வேண்டும். இதற்கான பட்டியலில் மருத்துவக் காரணம், இறப்பு அல்லது ஈமச் சடங்குகள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மற்றவை ஆகிய பிரிவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்தக் காரணங்களில் எதுவெனத் தேர்வு செய்த அதற்கான ஆவணத்தையும் உள்ளீடு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.