'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' நடிகருக்கு கொரோனா: மனைவி, மகள்களுக்கும் பாதிப்பு என தகவல்

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

பிரபல ஹாலிவுட் நடிகரும் WWE வீரருமான டிவானே ஜான்சன் என்ற ராக் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’, ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’, ‘ஃபாஸ்டர்’’ஹெர்குலஸ்’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் டிவானே ஜான்சன் என்ற ராக். இவர் பல ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற WWE வீரர் என்பதும் குறிப்பிடதக்கது

இந்த நிலையில் நடிகர் டிவானே ஜான்சன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது மனைவி மற்றும் மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு என்றும், தற்போது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ‘நோய் எதிர்ப்பு சக்தியை அனைவரும் அதிகரித்து கொள்ளுங்கள். கண்டிப்பாக மாஸ் அணியுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாப்புடன் பார்த்து கொள்ளுங்கள். எங்கள் குடும்பத்திற்கு இதுவொரு சோதனையான காலம். இருப்பினும் இதிலிருந்து மீண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.