'சிஎஸ்கே' பிராவோ நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிராவோ ஏற்கனவே தமிழில் வெளியான 'சித்திரம் பேசுதடி 2' படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிராவோ நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிராவோ நடிக்கும் அடுத்த படம் ஒரு குறும்படம். சமூக விழிப்புணர்வுடன் கூடிய கதையம்சம் கொண்ட ஒரு குறும்படத்தில் நடிக்க பிராவோ ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குறும்படத்தின் படப்ப்பிடிப்பு சென்னை, கோவை உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும் மே.இ.தீவுகளின் ஒருசில இடங்களிலும் படமாக்கப்படவுள்ளன.

இந்த குறும்படத்தில் பிராவோ நடிக்கும் கேரக்டர் என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும் பிராவோவின் டான்ஸ் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு அவரது நடிப்பையும் பார்க்க ஒரு வாய்ப்பாக இந்த குறும்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது