பலருக்கு விஷம் கொடுத்தேன்…. டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் 100க்கும் அதிகமான நோயாளிகளுக்கு தெரிந்தே விஷம் கொடுத்தேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் அந்நாட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நெதர்லாந்து சட்டப்படி தீராத வலி, சிகிச்சையில் முன்னேற்றமோ தீர்வோ இல்லாமல் போகும்போது நோயாளிகள் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் மருத்துவரின் அனுமதி பெற்று தற்கொலை செய்துகொள்ளலாம். ஆனால் இந்த விதிமுறைகளுக்கு பல கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த நடைமுறையை மாற்ற வேண்டும், தற்கொலை செய்துகொள்ள விரும்புவோருக்கான சட்ட வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று அந்நாட்டில் சில சமூகநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் விம் வான் திஜ்க் என்பவர் என்னுடைய சிகிச்சையின்போது நான் 100க்கும் மேற்பட்டோருக்கு விஷம் கொடுத்திருக்கிறேன். இந்தச் செயல் என்ன விளைவுகளை கொண்டுவரும் எனத் தெரிந்தே இதைச் செய்தேன். மேலும் இந்த விஷயங்களுக்காக என்னை கைது செய்தாலும் பரவாயில்லை என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
78 வயதான மனநல மருத்துவர் விம் கூறியுள்ள இந்தத் தகவலால் தற்போது கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா போன்ற சில நாடுகளில் தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கருணைகொலையை அரசிடம் இருந்து கோரி பெற்றுக்கொள்ள முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout