உலகிலேயே ரொம்ப காஸ்ட்லியான பர்கர்… ஒரு பீஸ் வெறும் ரூ.4 லட்சம்?
- IndiaGlitz, [Wednesday,July 14 2021]
கொரோனா நேரத்தில் உணவக உரிமையாளர்கள் பலரும் கடையை இழுத்துப் பூட்டி விட்டு வீட்டில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் டச்சு சமையல் கலைஞர் ஒருவர் உலகிலேயே மிக விலையுயர்ந்த பர்கர் ஒன்றை உருவாக்கி அதை ரூ.4 லட்சத்திற்கு விற்று வருகிறார். மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து காப்பகங்களுக்கு நன்கொடை வழங்குகிறார்.
டச்சு சமையல் கலைஞரான ராபர்ட் ஜான் டிவீன் என்பவர் “டி டால்டன்ஸ்” எனும் பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா நேரத்த்தில் “தி கோல்டன் பாய்” எனும் பெயரில் விலையுயர்ந்த பர்கரை உருவாக்கி இருக்கிறார். இந்த பர்கரில் தங்க இலைகள், மாட்டிறைச்சி, பெலுகா கேவியர், கிங் நண்டு, ஸ்பானிஸ் பாலெட்டா ஐபெரிகோ, காளான், இங்கிலீஸ் செடார் சீஸ் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறாராம். இந்தப் பொருட்கள் அனைத்து மிகவும் விலையுயர்ந்தவையாம்.
ராபர்ட் தனது ஹொம்பர்கருக்கு இந்த விலையுயர்ந்த பொருட்களை மிகவும் பிரத்யேகமாக உயர்தரத்துடன் பயன்படுத்தப்படுத்தி இருக்கிறார். அதனால் “தி கோல்டன் பாய்” பர்கரின் ஒரு பீஸ் 5,000 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது 4,41,305 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை விலையுயர்ந்த ஹாம்பர்கரை பலரும் விரும்பி சாப்பிட்டு இருக்கின்றனர்.
இதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ராபர்ட் தற்போது பல காப்பகங்களுக்கு நன்கொடை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். கொரோனா நேரத்தில் தேர்ந்த ஒரு கலைஞன் தனது சமையலில் புது அஸ்திரத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் சிலருக்கு உதவி செய்து வருகிறார். அவரது முயற்சிக்குப் பாராட்டுகள்.