நிம்மதியான ஓய்வு… நீச்சல் குளத்தில் இருந்தபடியே இளம் நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருக்கும் இளம் நடிகை ஒருவர் நீச்சல் குளம் அருகில் இருந்தபடியே புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
குறும்படங்களில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் நடிகை துஷாரா விஜயன். முதலில் ‘போதை ஏறி புத்தி மாறி’ எனும் திரைப்படத்தில் 2017 இல் அறிமுகமான இவர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “சார்பார்ட்டா பரம்பரை” திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அந்த வரிசையில் தற்போது அருள்நிதிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. அழுத்தமான கதாபாத்திரம், அற்புதமான நடிப்பு என்று தொடர்ந்து தனது நடிப்புக்காக பெயர் பெற்றுவரும் நடிகை துஷாரா அடுத்து ‘ராயன்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாகவும் நடிக்கவுள்ளார். மேலும் ‘அநீதி’ போன்ற ஒருசில திரைப்படங்களில் இணைந்து நடித்துவருகிறார்.
இந்நிலையில் அவ்வபோது தனது போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்தபடியே சற்று கவர்ச்சியான உடையில் Wild and free எனும் கேப்ஷனுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது சமூகவலைத் தளத்தில் கவனம் பெற்று ரசிகர்களிடையே பாராட்டைக் குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com