நடிகனாகி இருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்: துரைமுருகன் 

  • IndiaGlitz, [Wednesday,June 27 2018]

அரசியல்வாதியாக இல்லாமல் நடிகனாக இருந்திருந்தால் எனக்கும் ஜெயலலிதாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் கூறியவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டமன்றத்தில் இன்று பேசிய துரைமுருகன், கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க முன்வர வேண்டும் என்று பேசினார். மேலும் கிராமிய பாடல்களை அவையில் அவர் பாடியும் காட்டினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் துரைமுருகன், அழகாக பாடும் திறமையுள்ள நீங்கள் நாடகங்களில் நடித்துள்ளீர்களா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் தான் சிறுவயதில் பல நாடகங்களில் நடித்திருந்ததாகவும், அரசியலுக்கு வராமல் சினிமாத்துறைக்கு நடிக்க சென்றிருந்தால் சிவாஜி கணேசன் போல பெரிய நடிகராகியிருப்பேன் என்றும், ஜெயலலிதாவுடன் நடிக்கவும் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் கூறினார். துரைமுருகனின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலைகள் எழுந்தன

More News

மீண்டும் வருகிறது ரஜினி ரசிகர்கள் மிஸ் செய்த பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருக்கும். ஒன்று ரஜினியின் மாஸ் அறிமுக காட்சி. இன்னொன்று ரஜினியின் அறிமுக பாடல்.

சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தின் மீண்டும் விஜய்

தளபதி விஜய் ஆரம்பகட்டத்தில் காதல் படங்களில் நடித்து கொண்டிருந்தபோது அவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படங்களில் முக்கியமானது 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி'.

போலீசிடம் சிக்கிய பின் மக்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் நேற்றிரவு அதிக ஒலி எழுப்பிய கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது சென்னை நுங்கம்பாக்கம் அருகே போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டார். 

ஊட்டி விடும் பிரச்சனை: இரண்டாக பிளவுபட்ட பிக்பாஸ் பெண்கள் அணி

பிக்பாஸ் வீட்டில் வெங்காயத்தை வைத்தே ஒரு வாரம் ஓட்டிவிட்ட நிலையில் இந்த வாரம் எஜமானர்-வேலைக்காரி டாஸ்க்கை வைத்தே ஓட்டிவிடுவார்கள் போல் தெரிகிறது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! தினகரன் உற்சாகம்

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது