யார் இந்த தினகரன்? துணைக்கு பதில் சொல்ல மறுத்த துரைமுருகன்

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் தனது உறவினர் டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்தார் என்பது தெரிந்ததே. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியும் டிடிவி தினகரன் தலைமையில் கட்சியும் நடந்து வரும் நிலையில் நேற்று இரவு தினகரன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களிலும் திமுக ஊழல் செய்த கட்சி என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தினகரனின் இந்த குற்றச்சாட்டு குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'யார் இந்த தினகரன்? என்று தனக்கே உரிய நக்கலுடன் செய்தியாளர்களை பார்த்து கேட்டார். அதற்கு செய்தியாளர்கள் 'அவர் அதிமுக துணை பொதுச்செயலாளர் என கூற, 'துணைக்கெல்லாம் பதில் சொல்லி தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை' என்று கூறினார்

ஏற்கனவே கடந்த மாதம் ஓபிஎஸ் அவர்களை திமுக தான் பின்னால் இருந்து இயக்குவதாக சசிகலா கூறிய குற்றச்சாட்டு ஒன்றுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் சசிகலாவுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை பாவனா வாழ்வில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

பிரபல நடிகை பாவனா கடந்த மாதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகி அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்த நிலையில் இன்று அவருடைய வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

'காற்று வெளியிடை'- ட்ரைலர் விமர்சனம்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘காற்று வெளியிடை’ படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது.

ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார். ராகவா லாரன்ஸ் விளக்கம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மொட்டசிவா கெட்ட சிவா' படத்தின் டைட்டிலில் அவர் பெயருக்கு முன்னாள் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழி உள்ளது.

விஷாலிடம் விஷம் இருப்பது உண்மைதான். மிஷ்கின் அதிரடி பேச்சு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் ஐந்து அணியினர்களும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜெயேந்திரருடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! பாஜகவுக்கு தூது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காஞ்சி சங்கராச்சாரியர்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்களுக்கும் இடையே சிலகாலம் நல்லுறவு இருந்தாலும் பின்னர் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.