ஓவியாவுக்கு அப்புறம் எனக்குத்தான் ஆர்மி: துரைமுருகன்

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி 1இல் கலந்து கொண்ட ஓவியாவுக்கு அவரது பெயரில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும், அந்த ஆர்மி இன்னும் டுவிட்டரில் அவ்வப்போது டிரெண்டில் உள்ளது என்பதும் தெரிந்ததே.

அதேபோல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா உள்பட ஒருசிலருக்கும் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக பிரமுகர் துரைமுருகன் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திக்கும்போது சொல்லும் பதில்கள் சுவாரஸ்யமாக இருப்பதால் தற்போது அவருக்கும் ஃபேஸ்புக்கில் துரைமுருகன் ஆர்மி என்ற பெயரில் ஒரு ஆர்மியை நெட்டிசன்கள் ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, 'அப்ப பிக்பாஸ் ஓவியாவுக்கு பின்னர் எனக்குத்தான் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? அப்ப இனிமேல் இன்னும் சுவாரஸ்யமாக பேட்டி அளிக்க வேண்டும் போல' என்று கூறினார்.

More News

'சர்கார்' டைட்டிலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 62வது திரைப்படத்திற்கு 'சர்கார்' என்ற டைட்டில் சற்றுமுன் வெளியானது என்பது தெரிந்ததே.

கமல் டிரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஜெயகுமார்

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

'தமிழ்ப்படம் 2.0' படத்தின் டைட்டில்  திடீர் மாற்றம்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வரும் 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் 'த மஸ்கிட்டோ பிலாஸபி '

நடிகையும் கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் 'த மஸ்கிட்டோ பிலாஸபி 'என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார்.

மும்தாஜை கதறி அழவைத்த செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோ வீடியோவை தான் நெட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அதற்கு கிடைக்கும் ஆதரவும் பதிவு செய்யப்படும் கமெண்ட்டுகளும் இதனை உறுதி செய்கிறது.