மனைவி மகளுடன் துல்கர் சல்மான் புகைப்படம்: 3 மணி நேரத்தில் 15 லட்சம் லைக்ஸ்கள்

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

தமிழ், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

‘வாயை மூடி பேசவும், ’ஓ காதல் கண்மணி’ ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளவருமான துல்கர் சல்மான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் என்பது தெரிந்ததே

இந்தநிலையில் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் அந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவியும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளதை அடுத்து இந்த புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து 3 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 15 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகர் துல்கர் சல்மான் தற்போது ’ஹேய் சினாமிகா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

கமல், சூர்யா பட வில்லன் நடிகருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கமலஹாசன், சூர்யா, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

2-18 வயது உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி? எப்போது கிடைக்கும்?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கோவேக்சின், கோவிஷுல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 6-8 வாரங்களுக்கு பொதுமுடக்கம்? ஐசிஎம்ஆர் சொல்ல வருவது என்ன?

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம்...! அமைச்சர் அதிரடி உத்தரவு...!

பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின்  பாதுகாப்பு குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய  முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

சீமான் அவர்களின் தந்தை காலமானார்....! பாரதிராஜா இரங்கல்...!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சித்தலைவருமான சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் இன்று  காலமானார்.