துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்படம்: ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் துல்கர் சல்மான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படமான ‘ஹே சினாமிகா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த படம் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இந்த படம் துல்கர் சல்மானுக்கு மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என கருதப்படுகிறது.
Happy to launch the first look of our favourite and super talented @BrindhaGopal1 master’s debut directorial ????#HeySinamika @dulQuer @MsKajalAggarwal @aditiraohydari pic.twitter.com/5s7Jp6VcHU
— Suriya Sivakumar (@Suriya_offl) December 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com