துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா”: வெளியானது அட்டகாசமான டீசர் 

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும், அட்டகாசமான டீசர் வெளியானது !

Zee Studios மற்றும் Wayfarer Films' வழங்கும் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இறுதியாக தற்போது இப்படத்தின் இரத்தம் தெறிக்கும், அதிரடியான டீசரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் 'தி கிங்' (துல்கர் சல்மான்) வருவதைப் பார்க்கும்போது, நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான்.

'கிங் ஆஃப் கோதா' டீசர் கோதா மக்களின் வாழ்க்கையை காணும் ஆவலைத் தூண்டுகிறது. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படத்தின் இந்த டீஸர், நிச்சயமாகப் பார்ப்பவர் அனைவரிடத்திலும் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துவதுடன், திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இப்படம் 2023 ஓணம் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

More News

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வியாபாரமாகிவிட்ட கமல் படம்? கோலிவுட் ஆச்சரியம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் அந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் கோலிவுட் திரையுலகில்

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இணையும் 'வடசென்னை' பிரபலம்..!

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும்

கையில் சூலத்துடன் பைக்கில் வீலிங்.. TTF வாசன் அறிமுகமாகும் படத்தின் போஸ்டர்..!

யூடியூப் மூலம் பிரபலமான TTF வாசன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது பிறந்த நாளில் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் நடிக்கும்

முதல்முறையாக 3வது பாகமாக உருவாகும் கமல்ஹாசன் படம்.. உதயநிதி அளித்த மாஸ் தகவல்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவலை தயாரிப்பாளர்

'மாமன்னன்' படம் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.. மாரி செல்வராஜை என்ன செய்தார் தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'மாமன்னன்' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை சில பிரபலங்கள் பார்த்து