திருமண நாளை பழங்கால அரண்மனையில் கொண்டாடிய நட்சத்திர ஜோடி… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள நடிகர் துல்கர் சல்மானும் அவருடைய மனைவி அமல் சுஃபியாவும் தங்களது 10 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களது கொண்டாட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது திருமண நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக சமீபத்தில் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய 10 ஆவது திருமணநாளை சிறப்பிக்க தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரபல அரண்மனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள ரந்தம்பூர் அரண்மனைக்கு சென்ற துல்கர் – அமல் ஜோடி காலை சூரிய அஸ்தமனத்தில் இருந்து இரவுவரை தங்களது இனிமையான நேரத்தை பாரம்பரிய அரண்மனையில் கொண்டாடியுள்ளனர். சமீபத்தில் நடிகை கேத்ரினா மற்றும் விக்கி கௌஷால் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிக்ஸ்சென்ஸ் அரண்மனையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் துல்கரும் அவருடைய மனைவி அமலும் ரந்தம்பூர் அரண்மனையில் தங்களது திருமண நாளை கொண்டாடியதோடு இனிமையான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த அரண்மனை நிர்வாகத்திற்கு தங்களது நன்றியையும் கூறியுள்ளனர்.
நடிகர் துல்கர் சல்மான், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிவரும் “ஹே சினாமிகா“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிவரும் “சல்யூட்“ மற்றும் பிரபல தயாரிப்பாளரின் மகன் அபிலேஷ் இயக்கிவரும் புதிய திரைப்படம் ஒன்றிலும் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Dulquer Salmaan and Amaal's romantic 10th-anniversary celebration at Ranthambore fort ??#DulquerSalmaan pic.twitter.com/o8FbnPqvFl
— Pinkvilla South (@PinkvillaSouth) January 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com