மணமேடையிலேயே தூங்கிவிட்ட மணமகன்… கேலி, கிண்டலால் வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் பதிவிட்ட திருமண வரவேற்பு வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமேடையில் அமர்ந்து இருக்கும் மணமகன் தன்னை அறியாமலேயே தூங்கியபடி சரிந்து விழுகிறார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை சரியாக அமர வைக்கின்றனர். ஆனால் இந்த முயற்சி சில நொடிகளில் வீணாகிறது.
நம்மூர் திருமணங்களில் நடக்கும் கேலி, கிண்டலுக்கு அளவே இருக்காது. சில நேரங்களில் உறவினர்களுக்கு இடையே கத்திக்குத்து கூட நடக்கும். ஆனால் உலகத்தில் எங்குமே நடக்காத நிகழ்வு ஒன்று வட இந்திய திருமணம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. அதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமேடையில் ஒரு மணமகனும், மணமகளும் அமர்ந்துள்ளனர். ஆனால் அந்த மணமகன் தன்னை அறியாமல் தூங்கி வழிகிறார். அதோடு தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மணமகளின் மீதே சரிந்து விழுகிறார்.
இதைப் பார்த்த உறவினர்களும் நண்பர்களும் அந்த மணமகனை சரியாக அமர வைக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். ஆனால் கடைசிவரை அது நடக்காமலே போகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல சுவாரசியமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கூடவே அந்த மணமகன் குடிபோதையில் இப்படி செய்கிறாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கின்றனர்.
மேலும் ஒரு சிலர் இப்படி தனது திருமணத்தில் கூட தூங்க முடியுமா? என ஆச்சர்யத்தை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நிரஞ்சன் மகாபத்ரா என்பவர் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout