முதல்முறையாக தமிழ்ப்பாடலை பாடிய துல்கர் சல்மான்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

பிரபல நடன இயக்குனர் பிருந்தா தற்போது ’ஹே அனாமிகா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடித்து வருகின்றார் என்பதும், நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகின்றார் என்பதும் தெரிந்ததே. மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் அதிதிராவ் ஹைத்தி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

கோவிந்த் வசந்தா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகன் துல்கர் சல்மான் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலின் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் துல்கர்சல்மான் பாடும் முதல் தமிழ் பாடல் இது என்பதும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.