close
Choose your channels

விஜய் ஒரு சூப்பர் ஹீரோ: பிரபல நடிகர் பாராட்டு!

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் அது மட்டுமின்றி கோலிவுட் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதும் விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் நாளில் முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் திரையரங்குகளில் வந்து பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான். தமிழில் இவர் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் அளித்த பேட்டியில் விஜய் குறித்து அவர் கூறும்போது ’விஜய் ஒரு சூப்பர் ஹீரோ என்றும் அவரது நடனம் யாராலும் ஆட முடியாது என்றும் குறிப்பாக ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவருடைய நடனம் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எந்த விதமான நடன அமைப்பு கொடுத்தாலும் ஒரே நொடியில் அதனை விஜய் ஆடிவிடுவார் என்றும் அதுமட்டுமின்றி அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் விஜய் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது துல்கர் சல்மான், ஹேய் சினாமிகா’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி உள்பட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment