துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு 

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அதன் பின்னர் 'சோலோ' மற்றும் 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது அவர் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'வான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், தீனதயாளன் இசையமைப்பில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு திலீப் சுப்பராயன் இசையமைக்கவுள்ளார்.

More News

ஸ்டாலின் முதல்வராக ஆதரவு கொடுத்த பிரபல நடிகர்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கூறி வரும் நிலையில் திரையுலகில் சிலரும் திமுகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களில் நடிகர்களாக அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ். அந்த வரிசையில் கடந்த ஆண்டு 'மீசையை முறுக்கு' என்ற படத்தின் மூலம் நடிகராகவும்,

'வடசென்னை' ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கடந்த சில நாட்களாக அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மூழ்கியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஞ்சித் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

'அட்டக்கத்தி' , 'மெட்ராஸ்' ஆகிய இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தொடர்ச்சியாக 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.