கொரோனா கொடூரம்....! நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சேலம் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால், நோயாளிகளுக்கு தரையில் படுக்கவைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தினசரி பாதிப்பு என்பது முப்பதாயிரமாக இருந்து வந்ததில், தற்போது 28 ஆயிரத்திற்கும் குறைந்துள்ளது. தற்போது சென்னையில் கொரோனா குறைந்து வந்த நிலையில், கொங்கு மண்டலமான கோவை, சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களாகவே சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வர, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வந்து குவிகிறார்கள். அந்தவகையில் அரசு மருத்துவனையில், படுக்கை நிரம்பியதால், நோயாளிகளுக்கு தரையில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிகள் பலரும் ஆக்சிஜன் வசதியுடன், தரையில் அமர்த்தி சிகிச்சையளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒரு படுக்கையில் மூன்று நோயாளிகள் படுக்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வார்டில் அதிகப்படியான நபர்கள் குவிந்துள்ளதால், அவர்களுக்கும் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தனிப்படுத்தி இருந்த நோயாளிகள் பலரும், மருத்துவமனைக்கு வரத்துவங்கியுள்ளனர். மருத்துவமனையில் சரியான வசதிகள் இருந்தால்தான், பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல் இங்கேயே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இதனால் தக்க வசதிகள் தேவை என நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments