மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Thursday,December 08 2022]

வங்க கடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயல் காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை சென்னை உள்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் புயல் காரணமாக கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் மரங்கள் சாய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி நாளை இரவு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் கரையை கடக்கும் என்பதால் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளனர்.

More News

தனுஷின் 'கேப்டன் மில்லர்': இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

தனுஷ் நடித்துவரும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமின்றி சிவராஜ்குமார்

கமல்ஹாசனின் அடுத்த படம் டிராப்பா? இயக்குனர் விளக்கம்!

ஒருபக்கம் சூர்யாவின் 'வணங்கான்' திரைப்படம் டிராப் என்ற நிலையில் இன்னொரு பக்கம் கமல்ஹாசனின் அடுத்த படமும் டிராப் என சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன ஆச்சு மீரா ஜாஸ்மினுக்கு? உச்சகட்ட கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயதாகும் நிலையில் இந்த வயதிலும் அவர் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனை வருஷமா கஷ்டப்பட்டது போச்சே.. கதறி அழுகும் தனலட்சுமி!

இத்தனை வருடமாக கஷ்டப்பட்டது போச்சே என பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான தனலட்சுமி கதறி அழும் காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன.

'கேஜிஎப்' படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

'கேஜிஎப்'  மற்றும்ன் 'கேஜிஎப் 2' படங்களில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.