மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னையில் நாளை திரையரங்குகள் மூடப்படுகிறதா?

  • IndiaGlitz, [Sunday,December 03 2023]

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதை அடுத்து சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்வது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல திரையரங்குகளில் பார்வையாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தெலுங்கானா தேர்தல்: அனைத்து தொகுதியிலும் பவன் கல்யாண் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!

ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் நான்கு மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

3 வயதிலேயே அம்மாவுக்கு உதவி செய்யும் ஸ்ரேயா மகள்.. க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை ஸ்ரேயா சரணின் மூன்று வயது மகள் அவருடைய போட்டோஷூட்டுக்கு  உதவி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'பருத்திவீரன்' விவகாரம்': அமீருக்கு விழுந்த இன்னொரு ஓட்டு.. பிரபல தயாரிப்பாளர் ஆதரவு..!

கடந்த சில நாட்களாக 'பருத்திவீரன்'  விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமீருக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

விஷ்ணுவும் பூர்ணிமாவும் மட்டும் தான் போட்டியாளர்களா? கேப்டன்சி டாஸ்க் குறித்து வறுத்தெடுத்த கமல்..!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் விஷ்ணுவை வலுக்கட்டாயமாக கேப்டனாக்க மாயா பூர்ணிமா குரூப் வேலை செய்ததாக குற்றம் தட்டப்பட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் கேட்கும்போது

ஃபேவரிட்டிசம் குறித்து கன்னத்தில் அறைவது போல் கூறிய கமல்.. மாயா, பூர்ணிமா அதிர்ச்சி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃபேவரிட்டிசம்  என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் ஒரு போட்டியாளருக்கு விருப்பமானவர் என்ன தப்பு செய்தாலும் கண்டு கொள்ளவில்லை,