கொரோனா பீதியில் உதவிக்கு ஆளில்லை… அப்பாவின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற கொடுமை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நாய் திண்ணும் அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காய்ச்சலால் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராததால் அவருடைய மகன் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் நடந்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் கித்தூர் அடுத்த எம்.கே. உப்பள்ளி கிராமத்தில் சதப்பா என்ற (71) முதியவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய சதப்பா தீடிரென்று நேற்று காலை உயிரிழந்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததால் முதியவருக்கு கொரோனா பரிசோதனை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்த நிலையில் திடீரென முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோவானால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பாரோ என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பயந்து போயுள்ளனர்.
சதப்பாவின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட யாரும் முன்வராத நிலை ஏற்பட்டு உள்ளது. மநாகராட்சி ஊழியர்களின் உதவியை நாடி அதுவும் கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால் உயிரிழந்த முதியவரின் மகன் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் சேர்ந்து முழு நீள கவச உடைகளை அணிந்துகொண்டு உடலை சைக்கிளில் வைத்து எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கின்றனர். பாதுகாப்பு உடைக்கொண்டு அப்பாவின் உடலை முழுவதும் மூடிய மகன் சைக்கிளில் வைத்து அவரது உடலை எடுத்துச் சென்றிருக்கிறார். இச்செய்தியைக் கேட்டறிந்த நகரச்சபை உறுப்பினர் ஒருவர் வாகனம் ஒன்றைக் கொடுத்து உதவியிருக்கிறார். அதற்குப்பின் வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று பக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்றுகூட தெரியாமல் மக்கள் இப்படி குழப்பத்திற்கு ஆளாகும் நிலைமையும் ஏற்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களுக்கு அவமரியாதை இழைக்கப்படுவதாக குற்றச் சாட்டுகளும் முன்வைக்கப் படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments