கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பெரிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் திரையரங்கு மூடப்பட்டது உள்பட திரையுலகினர்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு சில பெரிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூர்யா நடித்து வரும் ’சூர்யா 40’ விக்ரம் நடித்து வரும் ’விக்ரம் 60’ சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இருப்பினும் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ உள்ளிட்ட ஒரு சில படங்களின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக அரசிடமிருந்து தடை விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் டிடி: மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை

தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி வாங்குவதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் ரூபாய் இரண்டு லட்சம் டிடி செலுத்த வேண்டும்

'வலிமை' அப்டேட்டே இன்னும் வரல, அதுக்குள்ள 'தல 61' அப்டேட்டா?

தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கையில்

லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லுங்க ஆபீஸர்ஸ்: தமிழ் நடிகர் டுவிட்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் 'லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லு ஆபீசர்ஸ்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பதியில் கொரோனா தொற்று உறுதியான 1,000 பேர் மாயம்… அதிர்ச்சி தகவல்!

கொரோனா நோய்த்தொற்று சற்றுத் தணிந்து இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்துக் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா வார்டில் சி.ஏ. தேர்வுக்கு படிக்கும் இளைஞர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய டிவிட்டரில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு உள்ளார்.