பிக்பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்.. பார்வையாளர்கள் அதிருப்தி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சில சீரியல்களை விஜய் டிவி நிர்வாகம் முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் சில சீரியல்கள் சமீபத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ ’முத்தழகு’ ’பனிவிழும் மலர்வனம்’ மற்றும் ’வீட்டுக்கு வீடு வாசல் படி’ ஆகிய நான்கு சீரியல்களை முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் ஒவ்வொரு வாரமும் முதல் 10 இடங்களில் இருக்கும் ’பாக்கியலட்சுமி’ சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதை அடுத்து முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ’முத்தழகு’ சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆசிஷ் சக்ரவர்த்தி ஷோபா மற்றும் வைஷாலி ஆகியோர் நடித்து வரும் இந்த சீரியல் இரண்டு ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலும் பிக் பாஸ் காரணமாக முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் ’பனிவிழும் மலர்வனம்’. இந்த சீரியல் டிஆர்பியில் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த நிர்வாகம் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர வைப்பதாக கூறப்படுகிறது. ’பாரதி கண்ணம்மா 2’ தொடரில் வினுஷா, ஷில்பா ஆகியோர் நாயகியாக நடித்திருக்கும் இந்த சீரியலில் சித்தார்த் குமார், ராயன் ஆகியோர் ஹீரோவாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியால் முடிக்கப்படவிருக்கும் இன்னொரு சீரியல் ’வீட்டுக்கு வீடு வாசப்படி’. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் கை கொடுக்கவில்லை என்பதால் இந்த சீரியலும் முடிவு பெற இருப்பதாக கூறப்படுகிறது. வெறும் 100 எபிசோடுகள் மட்டுமே எட்டி உள்ள இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் மேற்கண்ட 4 சீரியல்கள் முடிவுக்கு வருவது குறித்து விஜய் டிவி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout