லோகேஷ் கனகராஜ் செய்தது ரொம்ப தப்பு.. டப்பிங் யூனியன் நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லாத ஒருவரை டப்பிங் பேச வைத்தது லோகேஷ் கனகராஜ் செய்த தவறு என டப்பிங் யூனியன் நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்.
டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் போட்டியிடவில்லை என ராதாரவி கூறியதை அடுத்து துணை தலைவராக இருந்த ராஜேந்திரன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு எதிராக கதிரவன் என்பவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில் ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’ராதாரவி போட்டியிடவில்லை என்று கூறியதால் தான் நான் போட்டியிட்டேன், ஆனால் இனிமேல் நான் பின்வாங்க போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் சந்தா கட்டவில்லை என்று நீக்கப்பட்டார். அவர் நீதிமன்றம் சென்றபோது டப்பிங் யூனியன் எடுத்த நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சின்மயி தான் லைஃப் டைம் நம்பர் என்று பொய் கூறியதால் தான் டப்பிங் யூனியனுக்கு வழக்கு செலவு சில லட்சங்கள் செலவானது.
இந்த நிலையில் யூனியன் எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம், நீங்கள் ’லியோ’ படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுங்கள் என்று லோகேஷ் கனகராஜ், சின்மயி அவர்களை பயன்படுத்தியது மிகவும் தவறு, நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் சின்மயி மீண்டும் யூனியனில் சேர்ந்து அதன்பின்னர் டப்பிங் பேசியிருக்கலாம். புதிய நிர்வாகம் வந்த பிறகு இந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout