டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியின்றி ராதாரவி வெற்றி: சின்மயி மனு என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
டப்பிங் யூனியன் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான ராமராஜ்யம் அணி ஆகிய இரண்டு பேர் போட்டியிட்ட நிலையில் ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராதாரவிக்கு எதிராக போட்டியிட்ட சின்மயி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சின்மயி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்மயி நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் மற்ற பதவிகளுக்கு திட்டமிட்டபடி வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் சின்மயியின் ‘ராமராஜ்யம்’ அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments