டப்பிங் யூனியன் சங்க தேர்தல் முடிவுகள்.. ராதாரவிக்கு டஃப் கொடுத்தார்களா போட்டியாளர்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ராதாரவி வெற்றி பெற்று மீண்டும் தலைவர் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞருக்கு சங்கத்தின் 2024-26 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக ராதாரவி போட்டியிட்ட நிலையில் அவருக்கு எதிராக ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
நேற்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் நேற்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் மொத்தம் 1021 வாக்குகள் பதிவான நிலையில் அதில் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து மீண்டும் அவர் டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதாரவியை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் என்பவர் 349 வாக்குகளும் சற்குணராஜ் என்பவர் 36 வாக்குகள் மட்டுமே பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராதாரவி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தேர்தலில் 23 நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout