பிரபல இயக்குனருடன் காதல்.. டப்பிங் கலைஞர் ரவீனாவின் க்யூட் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரையுலகின் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா தனது காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களுக்கு ரவீனா டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளார் என்பதும், நயன்தாரா உள்பட பல முன்னணி நடிகைகளுக்கு அவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது.
அதேபோல், ரவீனா டப்பிங் கலைஞராக மட்டுமின்றி சில படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ’ஒரு கிடாயின் கருணை’, ’லவ் டுடே’, ’மாமன்னன்’ போன்ற படங்களில் அவரது கேரக்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் மலையாளத்தில், முழுக்க நாய்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ’வாலாட்டி’ படத்தை இயக்குனர் தேவன் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். இதில் அமலு என்னும் நாய்க்கு ரவீனா டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இதற்கிடையில், இந்த பணியின் போது தேவன் ஜெயக்குமாருக்கும் ரவீனாவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
தன் காதலை உறுதி செய்து, இயக்குனர் தேவன் ஜெயக்குமாருடன் எடுத்த புகைப்படத்தை ரவீனா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதனால் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com