100 வருட சினிமாவுலகில் டைட்டிலில் முதலிடம் பெற்ற நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா மட்டுமின்றி உலகின் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் டைட்டிலில் முதலில் வருவது நாயகன் பெயர் தான் என்பது எழுதப்படாத விதி. இதற்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? அல்லது ஹீரோதான் ஒரு படத்தின் முதுகெலும்பு என்பதால் டைட்டிலில் முதல் இடம் கிடைத்தது என்று கூறுவதா? என்று தெரியவில்லை.
இந்நிலையில் முதன்முதலாக ஒரு தமிழ் சினிமாவின் டைட்டிலில் நாயகி பெயர் முதலிடத்திலும் அதனை அடுத்து இரண்டாவதாக நாயகன் பெயரும் வரவுள்ளது. அந்த படம் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு"
பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா நாயகியாக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்தின் நாயகன் விதார்த். இதுகுறித்து விதார்த் வெளியிட்ட ஒரு காணொளி சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த காணொளியில் விதார்த் கூறியிருப்பதாவது:
"ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும், 'ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவினரும் இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கி இருக்கின்றோம். இதுவரை படத்தில் கதாநாயகர்களின் பெயர் தான் முதலில் வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் முதலாம் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம். எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் சார்பிலும் 'மகளிர் தின' வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்" என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகர் விதார்த்.
'ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்' தயாரிப்பில், 'காக்கா முட்டை' மணிகண்டனின் உதவி இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு'. படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர் வி சரண், இசையமைப்பாளராக ரகுராம், படத்தொகுப்பாளராக கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநராக டி கிராபோர்ட் ஆகியோர் பணியாறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout