இந்த காட்சியில் விஜய் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? மாஸ்டர் ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியான மாளவிகா மோகனனனுக்கு டப்பிங் செய்தவர் ரவீனா ரவி என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் டப்பிங் கலைஞர் ரவீனா ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’மாஸ்டர்’ படத்தின் ஒரு சில காட்சிகளில் விஜய் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். ’மாஸ்டர்’ படமே இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான விஜய் படம் தான் என்றும் வழக்கமான மசாலா பொழுதுபோக்கு மட்டுமின்றி விஜய் படத்தில் இதுவரை இல்லாத காட்சிகள் சில இருந்தது என்றும் ஒரு சில காட்சிகளில் விஜய் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாளவிகா மோகனன் பல காட்சிகளில் மலையாள உச்சரிப்புடன் பேசியிருந்தார் என்றும் அதற்கு தகுந்தார்போல் தனக்கு டப்பிங் பேச சிறிது கஷ்டமாக இருந்ததாகவும் அதன் பின்னர் சமாளித்து டப்பிங் பேசியதாகவும் கூறிய ரவீனா ரவி, ’மாஸ்டர்’ படம் வெளியாகும் முன்னரே மாளவிகாவுக்கு தான் டப்பிங் கொடுத்த செய்தி வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆனது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

ரவீனா ரவி கூறியபடி அப்படி என்ன வித்தியாசமான காட்சியில் விஜய் நடித்திருப்பார் என்ற தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.