'மாஸ்டர்' மாளவிகாவுக்கு டப்பிங் குரல் கொடுத்த தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்தவுடன் சரியான தேதியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் 'மாஸ்டர்’ படத்தின் நாயகியான மாளவிகா மோகனன், இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருப்பதாகவும், பேராசிரியராக நடித்திருக்கும் விஜய்யை காதலிக்கும் மாணவி கேரக்டரில் இவர் பட்டைய கிளப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'மாஸ்டர்’ மாளவிகாவிற்கு டப்பிங் கொடுத்தது ரவீனா ரவி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சிறு வயதிலிருந்தே டப்பிங் கலைஞராக இருந்து வரும் இவர் ’ஓகே கண்மணி’ ’வேலையில்லா பட்டதாரி’ ’உத்தமவில்லன்’ உள்பட பல படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். 'மாஸ்டர்’ படத்தில் ரவீனா ரவியின் குரல் மிகப் பொருத்தமாக மாளவியா மோகனுக்கு பொருந்தியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்’ஒரு கிடாயின் கருணை கதை’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரவீனா ரவியின் தாயார் ஸ்ரீஜா என்பவரும் தமிழ் திரை உலகில் டப்பிங் கலைஞராக பல வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி இவர் ’காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments