சூர்யாவுக்கு நடிக்க தெரியாது என்பது உண்மைதான்: ‘சூரரை போற்று’ டப்பிங் கலைஞர்!

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள ‘சூரரை போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஊடகங்களும் சமூக வலைதள பயனாளிகளும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சூர்யாவின் நடிப்பு மிக அபாரம் என்றும் சுதா கொங்கராவின் திரைக்கதை மிக அற்புதம் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘சூரரை போற்று’படத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் குறித்த ஒரு காட்சி வரும். இந்த கேரக்டருக்கு டப்பிங் கொடுத்துள்ள டப்பிங் கலைஞர் நவீன் முரளிதர் என்பவர் தனது பேஸ்புக்கில் இந்த படத்தில் தான் பணியாற்றியது குறித்து ஒரு பதிவு செய்து உள்ளார்.

அப்துல்கலாம் ஐயா அவர்களின் குரலில் பேச வாய்ப்பு கொடுத்த சூர்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிய எனக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். மேலும் சூர்யா அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று யாரோ சொன்னாங்க, உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியாது, ஆனால் இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்து காட்டி இருக்கின்றீர்கள்’ என்று கூறியுள்ளார். நவீனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

ஐபிஎல் அணியை வாங்குகிறாரா தென்னிந்திய நடிகர்: பரபரப்பு தகவல்!

சமீபத்தில் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தது என்பதும் இந்த தொடரில் மும்பை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்தியாவிற்கு மீண்டும் வருகிறதா பப்ஜி கேம்???

பப்ஜி விளையாட முடியாமல் மண்டையை பிடித்து கொண்டு சுத்திய இந்திய இளைஞர்களுக்காவே பப்ஜி நிறுவனம் தனது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மாலத்தீவில் மேலும் இரண்டு தமிழ் நடிகைகள்: வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ளார் என்பதும் அவர் ஹனிமூன் கொண்டாடும் விதவிதமான புகைப்படங்கள்

பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கொங்க செல்லம்: 'மாஸ்டர்' டீசர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

US: கமலா ஹாரிஸ், செலின் கவுண்டர் இவர்களைச் சுற்றும் சில திடுக்கிடும் விமர்சனங்கள்!!!

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸ் தன்னுடைய வெற்றிக்குப் பின்னர்