close
Choose your channels

தீபாவளி தினத்தில் அஜீத் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

Monday, October 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளால் சென்சார் செய்யப்படும் என கூறப்படுகிறது. கடந்த வாரமே இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் தரவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று மாலைக்குள் சென்சார் செய்யப்பட்டுவிட்டால், அதிவிரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அனேகமாக இவ்வார வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் டிரைலரில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். அனிருத்தின் இசையமைப்பில் ஏ.எம்.ரத்னம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அஜீத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படமும் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதால், அஜீத் ரசிகர்களுக்கு தீபாவளி தினத்தில் இரட்டை விருந்து கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment