'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு இரட்டை வேடமா?

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஜோதிகா நடிப்பில் பி வாசுவின் இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உறுதி செய்தார் என்பது தெரிந்ததே.

’சந்திரமுகி’ படத்தில் ரஜினிகாந்த் மனோதத்துவ டாக்டர் வேடத்திலும், ஒரு சில நிமிடங்கள் மட்டும் வேட்டையன் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் தற்போது ’சந்திரமுகி 2’ படத்தில் அவர் மனோததுவ டாக்டர் கேரக்டரில் மட்டும் நடிப்பார் என்றும் ‘வேட்டையன்’ கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் முதல் பாகத்தில் இளைய திலகம் பிரபு ஜோடியாகவும் சந்திரமுகியாகவும் நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2 படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஜோதிகாவிடம் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ’சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் ரஜினியுடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் மிஸ் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நயன்தாராவும் இந்த படத்தில் அதே துர்கா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, ராகவா லாரன்ஸ், ஆகியோர் இணையும் ’சந்திரமுகி 2’படம் தமிழ் சினிமாவின் மெகா ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஊரடங்கு நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விஜய்சேதுபதி செய்யும் உதவி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும்' 'ரம்மி' மற்றும் 'தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்துள்ளனர்

டீ குடிக்க போனேன்: கொரோனா வார்டில் மாயமானவரின் அதிர்ச்சி பதில்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

18 வயது இளைஞனின் நிறுவனத்தில் 50% முதலீடு செய்த ரத்தன் டாட்டா

18 வயது இளைஞர் ஒருவர் ஆரம்பித்த பார்மா நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா தனது சொந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்

படுக்கையறையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட மீராமிதுன்: வைரல் வீடியோ

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவதும், அவரது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள்

டாஸ்மாக்கை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு அதிரடி முடிவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவில் சிலர் தளர்வுகளை