தோனியை புகழ்ந்த பிரபல வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி கொடுத்த 206 என்ற இலக்கை எட்டுவது என்பது கடினமான ஒன்று என்றே கிரிக்கெட் விமர்சர்கள் கருத்து கூறினர். ஏனெனில் சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், சுரேஷ் ரெய்னா மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ராயுடுவுடன் களமிறங்கிய தலதோனி சிக்ஸர்களாக விளாசி தள்ளி தான் இன்னும் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை நேற்று மீண்டுமொரு முறை நிரூபித்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் அந்த ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் தல தோனி
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பெற்ற தல தோனிக்கு நாலாபுறமும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவருமான டூபிளஸ்சிஸ் தோனியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார். நேற்றிரவு தோனி மற்றும் ராயுடு பேட்டிங் அபாரம். கிட்டத்தட்ட வெற்றி பெற முடியாத போட்டியை பெஸ்ட் ஃபினிஷிர் என்ற முறையில் வெற்றியை தேடி கொடுத்துள்ளார் தோனி' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments