தோனியை புகழ்ந்த பிரபல வீரர்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி கொடுத்த 206 என்ற இலக்கை எட்டுவது என்பது கடினமான ஒன்று என்றே கிரிக்கெட் விமர்சர்கள் கருத்து கூறினர். ஏனெனில் சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், சுரேஷ் ரெய்னா மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 

இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ராயுடுவுடன் களமிறங்கிய தலதோனி சிக்ஸர்களாக விளாசி தள்ளி தான் இன்னும் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை நேற்று மீண்டுமொரு முறை நிரூபித்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் அந்த ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் தல தோனி

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பெற்ற தல தோனிக்கு நாலாபுறமும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவருமான டூபிளஸ்சிஸ் தோனியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார். நேற்றிரவு தோனி மற்றும் ராயுடு பேட்டிங் அபாரம். கிட்டத்தட்ட வெற்றி பெற முடியாத போட்டியை பெஸ்ட் ஃபினிஷிர் என்ற முறையில் வெற்றியை தேடி கொடுத்துள்ளார் தோனி' என்று கூறியுள்ளார்.

More News

விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது: விஷால்

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஷால், விஜய்யிடம் பிடித்த விஷயம் குறித்தும், அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார். 

சிவகுமார் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த அடுத்த நபர்

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

கமல்ஹாசனுக்கு முதல் குரல் கொடுத்த பின்னணி பாடகி மரணம்

'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87

'காலா' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 

குற்றவாளி ஆசாராம் பாபுவுக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல வட இந்திய சாமியார் ஆசாராம்பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவந்தது.