டிஎஸ்பி விஸ்ணுப்ரியா வழக்கு கைவிடப்பட்டதா? சிபிஐ அதிகாரிகள் கூறுவது என்ன?
- IndiaGlitz, [Monday,May 07 2018]
கடந்த 2015ஆம் ஆண்டு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா, தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த சிபிஐ இந்த வழக்கை திடீரென கைவிடுவதாக தெரிவித்துள்ளது. விஷ்ணுப்ரியாவின் மரணம் தற்கொலை தான் என்பதால் இந்த வழக்கை கைவிடுவதாக சிபிஐ, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சேலம் கோகுல்ராஜ் வழக்கை விசாரணை செய்து வந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா, உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று விஷ்ணுப்ரியாவின் தந்தை கோரிக்கை விடுத்திருந்தார்.இவரது கோரிக்கை ஏற்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாகவும், டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவின் மரணம் தற்கொலை தான் என்றும், கொலை அல்ல என்றும், இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று யாரும் இல்லை என்பதால் இந்த வழக்கை தாங்கள் கைவிடுவதாகவும் கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு வரும் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விஷ்ணுப்ரியாவின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கருத்தை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.