மனித நேயத்தின் உச்சம்… அறுந்த செருப்பை சரிசெய்து மூதாட்டிக்கு மாட்டிவிட்ட டிஎஸ்பி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி ஒருவர் மனதை நெகிழ வைக்கும் காரியத்தை செய்து பலரது பாராட்டையும் குவித்து வருகிறார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குடியாத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்வதற்காக இன்று டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் காவலர்கள் 50 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பணிகளை டிஎஸ்பி ராமமூர்த்தி கண்காணித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக மூதாட்டி ஒருவர் நடந்து வந்தார்.
மேலும் அந்த மூதாட்டி அணிந்திருந்த செருப்பு திடீரென அறுந்ததால் அவர் சாலையிலேயே தடுமாறினார். இதைக் கவனித்த டிஎஸ்பி ராமமூர்த்தி சற்றும் தயங்காமல் மூதாட்டியின் செருப்பை கழற்றி அதைச் சரிசெய்து மீண்டும் அவரது கையாலேயே மாட்டிவிட்டார். இந்தச் சம்பவம் பார்ப்போரை நெகிழ வைத்திருக்கிறது. மேலும் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டை குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments