விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தேவிஸ்ரீ பிரசாத்

  • IndiaGlitz, [Monday,September 14 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 1 என உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சென்சார் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், 'புலி' படத்தின் பின்னணி இசையை அமைக்கும் பணியில் முழுவீச்சில் இருப்பதாக கூறப்படுகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் கூறும்போது, 'புலி படத்தின் பின்னணி இசையில் எனது இசைக்குழுவினர்களுடன் ஈடுபட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 12 மணிக்கு 'புலி' படத்தின் புரமோ பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருசில தொழில்நுட்ப காரணங்களால் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. தாமதம் ஏற்பட்டதற்காக இளையதளபதியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தேவிஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'புலி' படத்தின் அனைத்து ஏரியாக்களும் ஏற்கனவே நல்ல தொகைக்கு விற்பனையாகிவிட்ட நிலையில், இந்த படத்தை அதிகளவிலான தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், ரோபோ சங்கர், வித்யூலேகா, தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபுதமீன் ஆகியோர் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

More News

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தை பெற்றார் தனுஷ்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் இணையதளத்தில் தென்னிந்திய நடிகர்களில் 2 மில்லியன்களுக்கும் அதிகமான...

ரசிகர்களுக்கு 'தல' வழங்கும் வியாழக்கிழமை விருந்துகள்

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்...

அஜீத் கெட்டப்பில் அமீர்கான் நடிக்கும் 'டங்கல்'?

கடந்த வருட இறுதியில் 'பிகே' என்னும் இந்தியாவின் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ...

தல 56': கொல்கத்தா படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு மால் மற்றும் தனியார்...

சந்தானம் நடித்த 'வாலிப ராஜா' ரிலீஸ் தேதி

கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக மாறி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'இனிமே இப்படித்தான்'...