close
Choose your channels

த்ரிஷ்யம் 3ஆம் பாகத்திற்கான ஐடியா பிரபல பாடகியிடம் இருந்து கிடைத்தது: ஜித்து ஜோசப்.

Thursday, August 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷ்யம்’ மற்றும் ’த்ரிஷ்யம் 2’ ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜீத்து ஜோசப், ’த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகத்திற்கு ஐடியா பாடகி சித்ராவிடம் பேசிக்கொண்டிருந்த போது எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோகன்லால், மீனா நடிப்பில் உருவான ’த்ரிஷ்யம்’ என்ற மலையாள திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பது தெரிந்தது. இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜீத்து ஜோசப் ’த்ரிஷ்யம் 3’ படம் குறித்து கூறியுள்ளார். ’த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகத்தை எப்படி முடிப்பது என்பதை முடிவு செய்து விட்டேன், அதை மோகன்லால் இடம் கூறிய போது அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.

ஆனால் ஆரம்பம் மற்றும் இடையில் உள்ள சில காட்சிகளை நிரப்புவது தான் சிரமம் உள்ளது . ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பாடகி சித்ராவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன விஷயத்திலிருந்து இந்த படத்தின் ஆரம்பத்திற்கான ஐடியா கிடைத்துவிட்டது. இனி மற்ற இடங்களை மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சிலிருந்து ’த்ரிஷ்யம் 3’ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment