சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் சூப்பர் ஹிட் தென்னிந்திய படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை அமீர்கானின் '3 இடியட்ஸ்', 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற திரைப்படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு அந்நாட்டில் பிரமாண்டமாக ரிலீஸாகி நல்ல வசூலை பெற்றது என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம்
ஆனால் முதல்முறையாக தென்னிந்தியா உள்பட இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஒன்றின் சீன ரீமேக் வியாபாரம் குறித்த செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது
ஆம், மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்', திரைப்படம் தமிழ் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், வட இந்தியாவில் இந்தி உள்பட சில மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகியது
இந்த நிலையில் சீன நிறுவனம் ஒன்று இந்த படத்தின் சீன ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று சமீபத்தில் கையெழுத்தானது. தென்னிந்திய திரைப்படம் ஒன்று சீன மொழியில் ரீமேக் செய்யப்படுவது அனேகமாக இதுதான் முதல்முறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com